எங்களை பற்றி

தினவு கலை இலக்கிய மெய்யியல் அரையாண்டு இதழ் ஒரு கூட்டு இயக்கம். சந்தாதாரர்கள் ஆதரவு மூலம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.


அச்சு இதழாக வும், இணைய இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, நூல் மதிப்புரை, விமர்சனம், மெய்யியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இலக்கியம் ஆகியன அச்சு இதழை அலங்கரிக்கின்றன. 


தினவு அபுனைவு அரையாண்டு இதழ் திரைப்படம், நாடகம், சூழலியல், அரசியல், ஓவியம் இன்னபிற இலக்கிய நயமிக்க கட்டுரைகள் மட்டுமே சார்ந்து இயங்கும் இதழ்.


குழுவாத மோதல்களுக்கு இடம் கொடுக்காமல், பல்வேறுபட்ட இலக்கிய, கருத்தியல் முரண் களும் விவாதிக்கும் தளமாக நமது தினவு இதழ் தன் சேவையைத் தொடர்ந்து நிகழ்த்தும். வாசிப்பில் இன்பம் மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறை எதிர்கொள்ளும் உலகின் சவால்களையும் இங்கு உரையாடுவோம். தமிழில் மங்கி வரும் விமர்சன மரபை முகம் பாராது படைப்பு சார்ந்து பேசுவோம்.


படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : aakaasamuthup@gmail.com


ஆசிரியர் : ஆகாசமுத்து


ஆசிரியர் குழு:

கிருஷ்ண கோபால்,

குமாரநந்தன்

App Logo